பவர் ஸ்டார் அல்ல பிராடு ஸ்டார் சீனிவாசன்: குவியும் மோசடி புகார்கள்

|

Is Srinivasan Power Star Or Fraud Star

சென்னை: மோசடி வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றியவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் பவர் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார். பவரை ஏற்கனவே தங்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் தற்போது அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது ஏராளமானோர் புகார் கொடுத்து வருகின்றனர்.

+ comments + 4 comments

Anonymous
11 May 2013 at 10:29

Many have been .writing Dr. srinivasan is a fraud.CINEMA LIKES FRAUDS.
Nadigar sangam should ban him from tamil films.
Media to tanvass for this.
He is a megha megha faudstar will be proved in future. films of srinivasan to be banned. Why goonda act is not used agaisnt him.
Amma please intervene.

Anonymous
11 May 2013 at 10:31

He is the greatest fraud star film have seen.Ban him from all films as he is proved guilty and court t decide his fate soon by sending him to jail. goonda act to be invoked against him.

Anonymous
11 May 2013 at 11:18

நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு மோசடிப் புகார் ஒன்றில் கைதானதால் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது நடிகர் சங்கத்தில் சாதாரண உறுப்பினராக உள்ள அவர் மீது கடந்த சில வாரங்களாகவே ஏராளமான மோசடிப் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடன் வாங்கித் தருவதாக சொல்லி, கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டி விட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Anonymous
11 May 2013 at 11:21

Post a Comment