புலனாய்வு அதிகாரியாக களமிறங்கும் ஆண்ட்ரியா... புதிய திருப்பங்கள்

|

Actress Andriya Plays As Investigation Officer New Film

சென்னை: சிருங்காரம் இயக்குநரின் அடுத்த படைப்பான குழந்தைக் கடத்தல் கதையில் ஆண்ட்ரியா புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறாராம்.

சமீப காலமாக பவர்ஸ்டாருக்கு அடுத்த படியாக அதிகம் செய்திகளில்பேசப்படுபவர் ஆண்ட்ரீயாவாகத் தான் இருப்பார். ஆனாலும் தமிழில் அவருக்கு சொல்லிக் கொள்கிற மாதி‌ரி படங்களில்லை.

பாட்டுப் பாடதான் வாய்ப்புகள் வருகின்றன. தற்போது, அவர் நடிக்கிற ஒரேயொரு முக்கியமான படம் புதிய திருப்பங்கள் தான்.

அடுத்த சிங்காரம்...

சிருங்காரம் படத்தை இயக்கிய சாரதா ராமநாதன் இயக்கும் படம் புதிய திருப்பங்கள். பெண் இயக்குனர் என்றாலும் துணிச்சலான சப்ஜெக்டை எடுத்திருக்கிறார்.

குழந்தை கடத்தல் படம்...

உலகில் இரண்டாது பெ‌ரிய குற்றம் குழந்தை கடத்தல் தான். டிவியை ஆன் செய்தாலும், செய்தித்தாளை பி‌ரித்தாலும் குழந்தை கடத்தல்தான் கண்ணில்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. அதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தபோது உருவானதுதானாம் புதிய திருப்பங்கள்.

புலனாய்வு வேடமாம்...

"ஆண்ட்‌ரியாவுக்கு இதில் புலானாய்வு பத்தி‌ரிகையாளர் வேடம். கதையை கேட்டு உடனே நடிக்க வந்திட்டார். அவருக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்குமாம்.

சூப்பரா இருக்காம்...

ஆண்ட்‌ரியா இதுவரை புலனாய்வு பத்தி‌ரிகையாளராக நடித்ததில்லை. அவரது போர்ஷன் சிறப்பாக வந்திருப்பதாக சாரதா ராமநாதன் தெ‌ரிவித்துள்ளார்.

நந்தா ஹீரோ...

புதிய திருப்பங்களில் அமெ‌ரிக்க கனவுடன் இருக்கும் இளைஞனாக நந்தா நடித்திருக்கிறார். அவர்தான் படத்தின் ஹீரோ. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.

 

Post a Comment