சென்னை: எடிசன் பிலிம் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
மை தமிழ் மூவி டாட் காம் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக "எடிசன் பிலிம் அவார்ட்ஸ்" என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அந்த நிறுவனம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 29 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருது தாண்டவம் படத்தில் நடித்த நடிகர் விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகியாக நடித்த ஹன்சிகாவிற்கும் கிடைத்துள்ளது.
அதே போல "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு புதுமுக நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.
கும்கி திரைப்படத்தின் இயக்குநர் பிரபு சாலமனும் அதே படத்திற்கு இசையமைத்த இமானும் விருது பெற்றனர்.
Post a Comment