தெனாலிராமனுக்காக இமான் இசையில் சொந்தக் குரலில் பாடிய வடிவேலு!

|

Vadivelu Renders Number His Tenalir

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

அரசியலில் சிக்கி கரையொதுங்கிய வடிவேலு சினிமாவை விட்டு விலக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.

இப்போது அவரது வனவாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துடன் மேலும் 3 படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறார். இவற்றில் ஒன்று கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படமாகும்.

இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து ஒரு படம் நடிக்கும் திட்டத்திலும் உள்ளாராம் வடிவேலு.

 

Post a Comment