நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படத்தைத் தந்த நிறுவனம் அடுத்து நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற பெயரில் படம் தயாரிக்கிறது.
லியோ விஷன் என்ற நிறுவனம் சார்பில் விஎஸ் ராஜ்குமார் தயாரித்து வெளியிட்ட படம் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.
இந்த வகை தலைப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நிறுவனம், தனது அடுத்தடுத்த படங்களுக்கும் இதே மாதிரி தலைப்பு வைத்து வருகிறது.
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதிலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ. அடுத்து மீண்டும் இதே மாதிரி தலைப்புடன் புதிய படத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்று பெயர் சூட்டியுள்ளனர். சமூக அக்கறையுடன் உருவாகும் இந்தப் படத்தை என்ஜே கிருஷ்ணா இயக்குகிறார்.
ஹீரோ ஹீரோயின் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Post a Comment