சென்னை: சிம்பு என்றாலே கண்ணுக்கு முன்னால் நிற்கும் ப்ளே பாய் இமேஜை சுத்தமாக துடைத்தெறிய ஆசை வந்துவிட்டது அவருக்கு.
விளைவு.... பட்டாயா, பார்ட்டி, டான்ஸ், தோழிகள் என்ற வட்டத்திலிருந்து சப்ஜாடாக விலகிக் கொண்ட சிம்பு, இப்போது ஆன்மீக வழியில் செல்கிறாராம்.
தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுப்பட்டு வந்த சிம்பு அதன் தொடர்ச்சியாக இப்போது புனித ஸ்தலங்கான ரிஷிகேஷ், ஹரிதுவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று தரிசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
சமீபத்தில் 'இங்க என்னா சொல்லுது' படப்பிடிப்பின்போது இந்த பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளார்.
இதைப் பற்றி பேசும் போது, 'ஆம், நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும்.
ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல... ஞானம் தேடுதல். நான் அந்த தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன். இந்த தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலும் மெருகேற்ற உதவும் என நம்புகிறேன்," என்கிறார்.
அட..!
Post a Comment