சென்னை: சூது கவ்வும் படக்குழுவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.
விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இப்படத்தை பார்த்துள்ளார். படத்தைப் பார்த்தவர் அசந்துவிட்டாராம். படக்குழுவை நேரில் பார்த்து பாராட்ட விரும்பியுள்ளார்.
இதையடுத்து சூது கவ்வும் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து மனதார பாராட்டியுள்ளார். படத்தின் நாயகன் விஜய் சேதுபதியால் மட்டும் கமல் அலுவலகத்திற்கு வர முடியவில்லை.
உலக நாயகனே தங்களை அழைத்து பாராட்டிய பெருமை படக்குழுவினரின் முகத்தில் தெரிந்தது.
Post a Comment