சென்னையில் ஒரு நாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் - தயாரிப்பாளர் லிஸ்டின் இணைந்து தயாரிக்கும் புதிய படம் புலிவால்.
இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை தமிழில் சென்னையில் ஒரு நாள் என எடுத்து வெற்றி கண்டது ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ். இந்தப் படத்தை ராதிராவுடன் இணைந்து தயாரித்தவர் லிஸ்டின்.
இப்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்கிறது. இந்தப் படத்துக்கு புலிவால் என பெயர் சூட்டியுள்ளனர்.
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சப்பா குரிசு படத்தைத்தான் புலிவால் என ரீமேக் செய்கின்றனர்.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் கூறுகையில், "சப்பா குரிசு கதையை அப்படியே காட்சிக்கு காட்சி எடுக்கவில்லை. அடிப்படை கதைக் கருவை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்," என்றார்.
இந்தப் படத்தை மாரிமுத்து இயக்குகிறார்.
Post a Comment