உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா, கார்த்தி

|

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா, கார்த்தி

சென்னை: சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் வெள்ளத்தால் பெரும் சேதமடைந்துள்ள உத்தரகண்டிற்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

உத்தரகண்டில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் நூற்றுக்கண்கானோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் சிக்கினர். பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்த உத்தரகண்டிற்கு திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் அகரம் பவுன்டேஷன் என்ற பெயரில் உத்தரகண்டிற்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன் கல்யாண் உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment