ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகாவை கண்டுகொள்ளாத சூர்யா

|

Suriya Doesn T Talk Hansika

சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் இடையே உள்ள நேரத்தில் சூர்யா தன்னுடன் பேசியதே இல்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா என்று இரு நாயகிகள் நடித்துள்ளனர். படத்தில் ஹன்சிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகா சூர்யா பற்றி கூறுகையில்,

சிங்கம் 2 படப்பிடிப்பின் இடையே ப்ரீ டைமில் சூர்யா ஒரு தடவை கூட என்னுடன் பேசியதே இல்லை. அவர் தனது காட்சிகளில் வந்து நடிப்பார். காட்சி முடிந்தவுடன் ஒன்று தனது கேரவனுக்கு சென்றுவிட்டார் இல்லை என்றால் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார் என்றார்.

பிரியாணில கார்த்தி எப்படி என்று சொல்லவில்லையே ஹன்சிகா...

 

Post a Comment