வாலிப ராஜா... கழட்டி விடப்பட்ட பவர் ஸ்டார்!

|

Power Star Dropped From Vaaliba Raj

கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி மீண்டும் இணைகிறது, வாலிப ராஜா படத்துக்காக. ஆனால் இதில் பவர் ஸ்டார் மிஸ்ஸிங். சந்தானம் - சேது - விசாகா சிங் மட்டும்தான் இந்தப் புதிய கூட்டணியில்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றியின் காரணமாக பவர் ஸ்டார் பல படங்களில் ஒப்பந்தமானார். தான் படு கேவலமாக கலாய்க்க ஒரு காமெடி பீஸ் வேண்டும் என்பதற்காகவே பவர் ஸ்டாரை பல படங்களில் சிபாரிசு செய்தார் சந்தானம்.

அப்படி ஒப்பந்தமான படங்களில் ஒன்றுதான் வாலிப ராஜா.

ஆனால் பவர் ஸ்டார் ஒரு மோசடி ராஜா என்பது அம்பலமாகி அவர் சிறைவாசத்தை அனுபவித்து வருவதால், சத்தமில்லாமல் அவரைக் கழட்டிவிட்டார் சந்தானம்.

சேது, விசாகாவை மட்டும் கூட்டணி சேர்த்துக் கொண்டு வாலிப ராஜாவை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மனோதத்துவ டாக்டராக நடிக்கிறாராம் சந்தானம்.

'கோ', 'மாற்றான்' ஆகிய படங்களில் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வாங்ஸ் விஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியும் உண்டு. சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜே.பி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

Post a Comment