மும்பை: ரசிகர்களைக் கண்டவுடன் கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கும் நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். ஆனால், தற்போது அதற்கு தடை விதித்திருக்கிறார்களாம் டாக்டர்கள்.
சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஷூட்டிங் போது ஷாரூக்கானிற்கு தோள் பட்டையில் அடி பட்டது. முதலில் அதற்கு லண்டனில் சென்று ஆபரேஷன் செய்து கொள்ள திட்டமிட்ட ஷாரூக்கான், பின்னர் முடிவை மாற்றி மும்பையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டது தெரிந்த விஷயம் தான்.
ஆபரேஷன் காரணமாக ஆறு வார காலம் கட்டாயம் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்திய டாக்டர்கள், கடினமான காட்சிகளில் நடிக்கவும் தடா போட்டார்கள். தோள்பட்டை வழி குணமாகும் வரை யாரையும் கட்டி பிடிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்களாம்.
அதனால், இன்னும் கொஞ்ச காலத்திற்கு ரசிகர்கள் எட்ட நின்று ஷாரூக்கை ரசிக்க வேண்டியது தான். அப்போது தான் ஷாரூக் சீக்கிரம் குணமடைவாராம்.
Post a Comment