பேஷாவர்: பாகிஸ்தான் நடிகை மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். சம்பவத்தின் பிண்ணனியில் திருமண மறுப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் வசித்து வருபவரான 18 வயது நடிகையான புஷ்ரா, சில படங்களிலும், டி.வி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளாராம்.
நேற்று இரவு அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்துள்ளான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த புஷ்ராவின் மீது ஆசிட் ஊற்றியுள்ளான். புஷ்ராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வருவதற்குள் தப்பி ஓடி விட்டானாம்.
ஆசிட் வீச்சினால் புஷ்ராவின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், இதனால் அவரது உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
.
புஷ்ராவின் சகோதரர் போலீசில் அளித்த புகாரில், நாடக தயாரிப்பாள ஒருவர் புஷ்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதை புஷ்ரா மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் கூட இந்த பாதகச் செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment