சென்னை: ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பில் தமிழ் சினிமா உலக பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் நேற்று சென்னை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடந்தது. மாலையில் அதே மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். ரஜினி சார்பில் அவர் மனைவி லதா ரஜினி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். ஜிவி பிரகாஷின் தாய்மாமாவாகிய ஏ ஆர் ரஹ்மானும் வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார்.
திமுக பொருளாளர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.
நடிகர்கள் விஜய், தனுஷ், பார்த்திபன், ஆர்யா, ஷாலினி அஜீத், அதர்வா, இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாரதிராஜா, ஷங்கர், அமீர், லிங்குசாமி, வெற்றிமாறன், வசந்த பாலன், சிம்பு தேவன், இசையமைப்பாளர்கள் டி இமான், விஜய் ஆன்டனி, பரத்வாஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தயாநிதி அழகிரி, எல்ரெட் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
Post a Comment