நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. அழகோடு, ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.
சமந்தா சமீபத்தில், கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி மருந்தினை எடுத்துக்கொண்டதாக தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதோடு பெண்கள் அனைவரும் இந்த நோய் குறித்த விழிப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தகவல் வெளியிட்டுள்ளார்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினால் இந்தியாவில் மட்டும், வருடத்திற்கு 80,000 பெண்கள் இறந்துபோவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் இந்த நோயினை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசினால் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இப்போது நடிகை சமந்தாவும் கருப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தூதராக செயல்பட்டு வரும் நிலையில் சமந்தா கருப்பை புற்றுநோய் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Got my final cervical cancer vaccine shot...one less reason to be afraid.. Girls pls make sure u get vaccinated for u and ur family
— Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) June 9, 2013
Post a Comment