மும்பை: முனி படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
பாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. தேவதாஸ், ப்ளாக் போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்த பன்சாலி, பிற மொழியில் வெற்றி பெற்ற படங்களை தனது பேனரில் தயாரித்தும் வருகிறார்.
சமீபத்தில் சிறுத்தை படத்தின் உரிமையை வாங்கி, அதை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார். பிரபு தேவா இயக்கிய இந்தப் படம் வசூலைக் குவித்தது.
இப்போது தமிழ் - தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் முனி 2 (காஞ்சனா) ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.
இந்தப் படத்தை ராகவா லாரன்சே இயக்கப் போகிறார். இளம் நடிகர் ஒருவரை நாயகனாக ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளார்களாம்.
காஞ்சனா படத்தில் சரத்குமார், ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய், கோவை சரளா நடித்திருந்தனர். ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார்.
Post a Comment