சென்னை: கமல் இயக்கி, நடிக்கவிருக்கும் புதிய படத்தில் காஜல் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி, நடிக்கும் படத்திற்கு உத்தம வில்லன் என்று பெயர் வைக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்குமாறு காஜல் அகர்வாலை கேட்டனர். அவரோ டேட்ஸ் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா அல்லது லேகா வாஷிங்டனை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் திவ்யாவுக்கு தான் முக்கியத்துவமாம். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்குகிறது.
கமல் இயக்குவதால் தனது படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளை அவர் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். சிம்பு, தனுஷ், சூர்யாவுடன் நடித்த திவ்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட் தான்.
Post a Comment