இந்தப் படம் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாக ஆரம்பித்துள்ளது. இந்தப் படத்தை ரூ 45 கோடி பட்ஜெட்டுக்குள் எடுத்துவிடும் திட்டத்தில் உள்ளனர். அவ்வை சண்முகி மாதிரி முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இதனை எடுக்கிறார்களாம்.
படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.
முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கிறார் நடிகர் விவேக். படத்தின் தலைப்பு குறித்து பல தககவல்கள் வெளியாகியுள்ளன. நகைச்சுவைப் படம் என்பதால் உத்தம வில்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கெனவே சர்வாதிகாரி, தலைவன் இருக்கிறான் உள்பட பல தலைப்புகளை கமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
Post a Comment