அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு, தகராறு- போலீசில் புகார்!

|

அமீர் நடிக்கும் படப்பிடிப்பில் கல்வீச்சு மற்றும் தகராறு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யோகி படத்திற்கு பிறகு அமீர் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பேரன்புமிக்க பெரியோர்களே. சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு அந்த மர்ம நபர்கள் படப்பிடிப்பு சாதனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு, தகராறு- போலீசில் புகார்!

இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாரதிராஜாவின் அபிமானிகள் சிலர்தான் இந்த கல்வீச்சுக்கு காரணமாக இருக்கும் என நினைத்து அமீர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சம்பவத்தை கேள்விப்பட்ட பாரதிராஜா உடனே அதை மறுத்துள்ளார்.

எனவே அமீர் மாவட்ட காவல் அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இப்போது பலத்த பாதுகாப்போடு ஷூட்டிங் நடந்து வருகிறது.

 

Post a Comment