சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்ற சுந்தர் சி.

|

சென்னை: இயக்குனர் சுந்தர் சி.க்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சுந்தர் சி.க்கு நமக்குத் தெரியாமல் எப்பொழுது ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்களா?. அவரின் தீயா வேலை செய்யணும் குமாரு படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவரது மகிழ்ச்சி அதிகரித்துள்ளதற்கு அவரது மகள் தான் காரணம்.

சுந்தரின் மகள் சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஒரு பேப்பரில் வரைந்து அதை அவருக்கு அளித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான 'ஆஸ்கர் விருது' பெற்ற சுந்தர் சி.!

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை சுந்தர் சி. அவரது மகளிடம் இருந்து பெற்றார். இதை விட அவருக்கு வேறு எதுவும்வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment