சென்னை: பல கோடி மோசடி வழக்கில் நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கனரா வங்கியில் ரூ.19 கோடி மற்றும் இன்னொரு வங்கியில் ரூ 75 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிகளை அரங்கேற்றிய அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
லீனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அனைத்து மோசடிகளையும் சுகாஷ்தான் செய்தார் என்றும், தனக்கு நடிகை ஆசை காட்டி ஆசை நாயகியாக வைத்திருந்தார் என்றும் கூறிவிட்டார்.
இப்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லீனா மரியா தனக்கு ஜாமீன் கேட்டு திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
புதன்கிழமை இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராயினார். லீனா மரியா தரப்பில் வழக்குரைஞர் ஜான் சத்யா ஆஜராயினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லாகான், நடிகை லீனா மரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Post a Comment