சென்னை: நடிகை மீரா நந்தன் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகுகிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளவர் மீரா நந்தன். தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்போது நடித்தது போதும், திருமணம் செய்து செட்டிலாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் மீராநந்தனே இதனைத் தெரிவித்தார்.
திருமணம் எப்போது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. ஆனால், சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒருவரைத்தான் திருமணம் செய்யப் போகிறாராம்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க மீராநந்தன் திட்டமிட்டுள்ளாராம். தமிழில் இப்போது அவருக்கு எந்தப் படமும் இல்லை. மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் மீராநந்தன் தற்போது நடித்து வருகிறார்.
Post a Comment