தயாரிப்பாளர் ஏஎல்எஸ் நாச்சியப்பன் மகன் திருமண வரவேற்பு - முதல்வர் நேரில் வாழ்த்து

|

சென்னை: இந்தியப் பசுமைத் தீர்பாய்யத்தின் தென்மண்டல நீதிபதி சொக்கலிங்கம் சகோதரரும் படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.நாச்சியப்பன் மகன் முத்து கணேஷ் - லலித் கலா அகாடமியின் தென்மண்டல இயக்குனர் பழனியப்பன் மகள் நித்தியா திருமண வரவேற்பில் நேரில் வந்து வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா.

முத்துகணேஷ் - நித்யா திருமணத்தில் குன்றக்குடி அடிகளார், கோவிலூர் ஆதினகர்த்தர், உயர் போலீஸ் அதிகாரிகள், சிவகங்கை மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு திரையரங்க சங்கத்தலைவர் அண்ணாமலை, தொழில் அதிபர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

jayalalithaa wishes producer nachiyappan son marriage

மணமக்களை வாழ்த்தி நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் கவிஞர் அரு.சோமநாதன், முனைவர் ஆறு அழகப்பன், அசத்தப் போவது யாரு தேவகோட்டை ராமநாதன் மற்றும் பலர் பேசினார்கள்.

அந்த 7 நாட்கள், ஆகாய கங்கை, நேரம் நல்லாருக்கு, ராஜா மகாராஜா படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் ஏஎல் நாச்சியப்பன். பட அதிபர் ஏஎல் சீனிவாசனின் செயலாளராக நீண்ட நாள் பணியாற்றியவர்.

 

Post a Comment