புது தில்லு முல்லு- கே பாலச்சந்தர் பாராட்டு

|

k balachander praises thillu mullu
சென்னை: 1981-ல் தான் இயக்கி ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தின் புதிய ரீமேக்கைப் பார்த்த கே பாலச்சந்தர், அந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்தப் படம் பார்த்த பின்னர் கேபி கூறுகையில், "இந்த தில்லு முல்லு படம் எனக்கே புதுசா இருக்கு. நிறைய மாற்றங்கள் பண்ணிருக்காங்க. மாடர்ன் ஆகவும் இருக்கு. அதே சமயம் அனைவரும் பார்க்கும் விதமாகவும் அமைத்திருக்கிறார்கள்.

இது மிக பெரிய அளவில் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இசை அற்புதமாக வந்துள்ளது. சிவா மிக அருமையாக நடித்துள்ளார்," என்றார்.

இயக்குநர் பத்ரி பற்றி கூறும்போது, "கொஞ்சம் கூட பழைய தில்லு முல்லு படத்தின் சாயலே இல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்ப மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் பத்ரி. தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைங்கர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தில்லுமுல்லு படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, ரசிகர்கள் மத்தியில்.

 

Post a Comment