ஹைதராபாத்: மா டிவியின் சினிமா விருது வழங்கும் விழாவில் தமிழில் சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகை விருது காஜல் அகர்வாலுக்கும் வழங்கப்பட்டது.
தமிழ், தெலுங்கில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவரை தேர்வு செய்தனர்.
சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாணும் (கப்பார் சிங்), சிறந்த நடிகையாக சமந்தாவும் (ஈகா) தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றனர். கப்பார் சிங் படம் மட்டும் 9 விருதுகளைப் பெற்றது. ஈகாவுக்கு நான்கு விருதுகள் கிடைத்தன. சிறந்த வில்லனாக சுதீப் விருது பெற்றார்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா, காஜல் அகர்வால் ஆகியோர் நேரில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.
நடிகைகள் அஞ்சலி, சார்மி, நித்யா மேனன், நடிகர் நாகார்ஜுனா உள்பட பலரும் பங்கேற்றனர்.
Post a Comment