கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் பரபரப்பான கதாநாயகியாகவே திகழ்கிறார் த்ரிஷா.
துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன்.
இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார். இவருக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
கதாநாயகியாக இயக்குநர் மற்றும் ஹீரோவின் முதல் சாய்ஸே த்ரிஷாதானாம். ஏற்கெனவே மவுனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யாவுடன் நடித்தவர்தான் த்ரிஷா.
இன்னொரு பக்கம் அமலா பாலுடனும் பேசி வருகிறார்களாம். இருவரையுமே நாயகியாக்கினால் என்ன என்றும் பேசப்பட்டு வருகிறதாம்.
இந்தப் படத்தில் ஏற்கெனவே சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment