கோவில் கும்பாபிஷேகத்தில் சூர்யா, கார்த்திக்கு பரிவட்டம்

|

Suriya Karthi Honoured Kumbabishekam

கோவை: கோவையில் உள்ள கோவில் திருவிழா ஒன்றில் சூர்யாவுக்கும், கார்த்திக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது.

சிவகுமார் குடும்பம் கோவை அருகே உள்ள காசிகவுண்டன்புதூரைச் சேர்ந்தது. அந்த ஊரில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகுமார் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.

சிவகுமார் தலைமையில் நடந்த விழாவில் கணபதி ஹோமம், யாகசாலை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. பூஜைகள் முடிந்த பிறகு சூர்யா மற்றும் கார்த்திக்கு பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்பட்டடது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

சூர்யாவின் சிங்கம் 2 படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக அவர் கௌதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார். கார்த்தி பிரியாணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

Post a Comment