எனக்கு சிக்ஸ் பேக் ஆண்கள் வேணவே வேணாம்! - கங்கனா

|

எனக்கு சிக்ஸ் பேக் ஆண்கள் வேணவே வேணாம்! - கங்கனா

சென்னை: சிக்ஸ் பேக், ஜிம் பாடி ஆண்களை எனக்குப் பிடிக்காது. இந்த மாதிரி ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார் பிரபல நடிகை கங்கனா ரனவத்.

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனவத். இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது திருமணம், குடும்பம் என செட்டிலாகும் மூடுக்கு வந்துவிட்டார்.

தனக்கு எப்படிப்பட்ட ஆண் துணை வேண்டும் என்பது குறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பலசாலிகளாக இருப்பதை விட, அன்பானவர்களாக இருப்பதையே விரும்புகிறேன். சிக்ஸ்பேக், ஜிம் பாடி ஆண்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்.

வாழ்க்கையில் காதலை விட முக்கியமான விஷயங்கள் ஏராளம் உள்ளன. எனவே இப்போது காதல் பற்றி பேச எனக்கு நேரம் கிடையாது. அதுபற்றி எதுவும் தெரியாது.

சினிமாவில் கதாநாயகிகளை ஆபாசமாக பொம்மை போல காட்டுகிறார்கள். இது சரியானதல்ல.

நான் ஆபாசமாக நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஆபாச முத்திரை விழுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கிறேன். ஹ்ரித்திக் ரோஷனுடன் கிரிஷ் 3 படத்தில் இப்போது நடித்து வருகிறேன்," என்றார்.

 

Post a Comment