சென்னை: பவர் ஸ்டார் பல்வேறு மோசடி வழக்குகளில் சிறைக்குள் இருக்கிறார். இந்நிலையில் லிட்டில் பவர் ஸ்டார் திரைக்கு வந்துள்ளார்.
டாக்டர் சீனிவாசன் தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் அளித்துக் கொண்டு சுய விளம்பரம் செய்து வந்தார். இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பவரை சந்தானம் கலாய்த்து கலாய்த்து அவரின் மார்க்கெட்டை ஏற்றிவிட்டார். இந்த படத்தை அடுத்து பவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன.
இந்நிலையில் அவர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பவர் சிறையில் இருக்கையில் கோலிவுட்டில் நடிக்க வந்துள்ள குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் அய்யப்பன் தன்னை லிட்டில் பவர் ஸ்டார் என்று கூறிக் கொள்கிறார். எனக்கு தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா என்று லிட்டில் பவர் கூறி வருகிறார்.
அவர் இயக்குனர் ரவி தம்பி இயக்கத்தில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற படத்தில் காமெடி காட்சிகளில் நன்றாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் ஜில்லாவிலும் காமெடி கதாபாத்திரத்தில் வருகிறாராம் லிட்டில் பவர்.
ஒரு பவரே முடியல, இதுல லிட்டில் பவர் வேறையா?
Post a Comment