இரும்புக் குதிரை... ஆக்ஷனில் இறங்கினார் அதர்வா!

|

Atharva Turns Action Hero

பாலாவின் பரதேசியில் 'நியாயமாரே..' என சோகத்தைப் பிழிந்த அதர்வா அடுத்து முழுநீள ஆக்ஷனில் இறங்கிவிட்டார்.

இந்தப் படத்துக்கு இரும்புக்குதிரை என பெயரிடப்பட்டுள்ளது. பரதேசிக்குப் பிறகு ரொம்ப நாளாக பல கதைகளைக் கேட்டு, முக்கியமாக அவற்றுக்கு பாலாவின் ஒப்புதலுக்காக காத்திருந்தாராம் அதர்வா.

அப்படி பாலா ஓகே சொன்ன கதைகளில் ஒன்றுதான் இந்த இரும்புக் குதிரை.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார்.

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த வியட்நாம் - அமெரிக்க நடிகர் ஜானி ட்ரை நூகி நடிக்கிறார் (அதாங்க டாங் லீ).

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே இதே நிறுவனம் தயாரிக்கும் ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வையிலும் ப்ரியா ஆனந்த்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment