கவர்னர் தொடங்கி வைத்த புதுப் படம்.. இளமைப் பயணம்!

|

இளமைப் பயணம் என்ற படத்தினை தொடங்கி வைத்து வாழ்த்தினார் தமிழக கவர்னர் ரோசய்யா.

மேஜிக் அண்டு லாஜிக் புரோடக்சன் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சித்ரா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் இளமை பயணம். இப்படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆர். ரேஹானா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரோசன், மனாஷ், வினோத், ப்ரீத்தி, ஸ்வீட்டி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் சேகர், ராதாரவி, அம்பிகா, கோவை சரளா. தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கவர்னர் தொடங்கி வைத்த புதுப் படம்.. இளமைப் பயணம்!

இந்த படத்தின் பூஜை நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் ராதாரவி, இயக்குனர் மாதேஷ், விக்ரமன், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழக கவர்னர் ரோசய்யா படபூஜையை துவங்கி வைத்ததார்.

அப்போது அவர் ''எனக்கு சினிமா பற்றி அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் படத்தில் நடிக்கும் அனைவரையும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.

மூன்று ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்களை கொண்ட ஒரு காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்குதாக படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் தெரிவித்தார்.

 

Post a Comment