கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டுது என்பார்களே... அது முழுக்க முழுக்க உண்மையாகியிருக்கிறது லட்சுமி மேனன் விஷயத்தில்!
புதிய படத்துக்கு ஸ்கிரீன்ப்ளே எழுதும்போதே ஹீரோயின் லட்சுமிமேனன்தான் என முடிவு செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.
கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்குமேல் கைவசம் உள்ளன. எல்லாமே முன்னணி ஹீரோ மற்றும் இயக்குநர்களின் படங்கள்.
அடுத்து பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இரண்டாவது படத்தில் லட்சுமி மேனனை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
பொதுவாக கதை கேட்பதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை லட்சுமி மேனன்.
ஹீரோ யார் என்று கூட அதிக அக்கறை காட்டுவதில்லையாம். இயக்குநர், தயாரிப்பாளரை வைத்து அவர் படங்களை ஒப்புக் கொள்வாராம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தொடர்பு கொண்டு, என் அடுத்த படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதும் சரி என்று ஒப்புக் கொண்டாராம் லட்சுமி மேனன்.
பீட்சா போலவே இந்தப் படமும் ஒரு த்ரில்லர். ஹீரோ சித்தார்த்!
Post a Comment