சென்னை: சீமான் கதையை காப்பியடித்த லிங்குசாமியின் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக வந்த செய்தியை லிங்குசாமி மறுத்துள்ளார்.
சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்குவது உறுதி என்று தெரிவித்துள்ள லிங்குசாமி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கவுதம் மேனனின் துருவநட்சத்திரம், லிங்குசாமியின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடிப்பதாக சூர்யா ஒப்பந்தமானார்.
துருவநட்சத்திரம் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு பின்னர் கதை, கதாநாயகி விஷயத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே லிங்குசாமி படத்தை உடனடியாகத் தொடங்க முடிவு செய்தார் சூர்யா.
ஆனால் அந்தப் படத்தின் கதை சீமானின் பகலவன் கதையின் ஜெராக்ஸ் காப்பி என்று தெரிய வந்ததால் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.
இந்த நிலையில், லிங்குசாமி படத்தின் கதை மாற்றப்பட்டுவிட்டதாகவும், சூர்யா சம்மதத்துடன் வரும் 21ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் லிங்குசாமியே அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Post a Comment