கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா

|

கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா  

சென்னை: அனுஷ்காவுக்கு கரப்பான்பூச்சி என்றாலே அலர்ஜியாம்.

படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது.

அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேரவனில் கரப்பான்பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம். என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படலாமா?

 

Post a Comment