பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்

|

பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்

நான் பாடப்போறேன்.... பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன்.

"ஊரைக் காக்க உண்டான சங்கம்...

உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...இது இல்லை....

நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை".....

இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல்.யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் செம ஹிட் அடித்துள்ளதாம்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவகார்த்திக்கேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் போன்ற படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார்.

சிவகார்த்திக்கேயனின் காமெடி கலந்த நடிப்பு இளம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சத்யராஜும் நடிக்கிறார். அவருக்கு ஜோடி பிந்து மாதவி.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் இமான், முதன் முறையாக சிவகார்த்திக்கேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார். கிராமிய மனம் கமழும் இந்தப்பாடல் இப்போது யுடியூப் ஹிட் ஆகியுள்ளது. சினிமாவில் பின்னணி பாடிய அனுபவம் குறித்து பேசிய சிவகார்த்திக்கேயன், பள்ளி நாட்களில் நான் பாடும் போது என் குரலை கேட்டு நானே பயந்து இருக்கிறேன். இப்போது இமான் என்னிடம் பாடக் கேட்ட போது கூட அதைக் கூறி முதலில் மறுத்தேன். ஆனால் அவர் முயற்சி செய்யுங்கள் நன்றாக வரும் என்று ஊக்கப்படுத்தினார். அப்போது நான் கிராமிய பாடகர் அந்தோணிதாசன் பாடிய காசு பணம் துட்டு பாடலை மனதில் வைத்துக் கொண்டு பாட முயற்சி செய்தேன். இமான் கொடுத்த ஊக்கத்தால் சிறப்பாக பாட முடிந்தது என்றார். எப்படியோ ரஜினி, கமல்,விஜய், சிம்பு, தனுஷ் வரிசையில் நடிகராக இருந்து பாடகராகிவிட்டார் சிவகார்த்திக்கேயன்.

 

Post a Comment