சென்னை: ராஜா ராணி படத்துக்குப் பிறகு ஏஆர் முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் பிரிவதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் உலா வந்தன.
இப்போது அந்த வதந்தியை பொய்யாக்கியிருக்கிறது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்.
ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஃபாக்ஸ், இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் என்ற பெயரில் தயாரிப்பில் இறங்கியது. தமிழ், இந்திப் படங்களைத் தயாரித்தது. தமிழில் ஏ ஆர் முருகதாஸின் சொந்தப்பட நிறுவனத்துடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி படங்களைத் தயாரித்தது. இப்போது ராஜா ராணி படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ராஜா ராணியுடன் முருகதாஸ் - பாக்ஸ் ஸ்டார் கூட்டணி முறிந்துவிட்டதாக வதந்தி கிளம்பியது.
ஆனால் அது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், 'தங்களின் அடுத்த இந்திப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார்' என ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படம் 2014-ம் ஆண்டு தயாராகிறது. இந்த அறிவிப்பை இயக்குநர் ஏஆர் முருகதாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment