இன்னொரு வாட்டி லவ்வே வேணாம்பா! - களைத்துப் போன நயன்தாரா

|

காதலில் விழுந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து... ரொம்ப களைத்துவிட்டாராம் நயன்தாரா. எனவே இன்னொரு முறை காதலில் விழும் அனுபவம் வேண்டாம் என்கிறார்.

சிம்பு, தனுஷ், பிரபுதேவா, இப்போது ஆர்யா என பலருடனும் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் வெளிப்படையாக காதல் பேசி, கொஞ்ச நாளில் முறித்துக் கொண்டு வெளியில் வந்தவர் நயன்தாரா.

எத்தனை காதல் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் மீண்டும் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது நான் தனியாக இருக்கிறேன். எந்த சிக்கலும் இல்லை. வாழ்க்கை தெளிவாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிறைவான பாத்திரங்கள், பிடித்த படங்களில் நடிக்கிறேன்.

இன்னொரு வாட்டி லவ்வே வேணாம்பா! - களைத்துப் போன நயன்தாரா

இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழும் அனுபவத்தை நான் விரும்பவில்லை. அந்த வாழ்க்கை அலுப்பைத்தான் தந்தது. சுதந்திரமாக வாழ்கிறேன். அந்த சுதந்திரத்தை இழக்க மாட்டேன்," என்றார்.

 

Post a Comment