சஞ்சய்தத்தின் பெயரை ‘மோதிரமாக’ டாட்டூஸ் போட்டுக் கொண்ட மானயதா தத்!

|

சஞ்சய்தத்தின் பெயரை ‘மோதிரமாக’ டாட்டூஸ் போட்டுக் கொண்ட மானயதா தத்!

மும்பை: சிறையில் இருக்கும் அன்புக் கண்வர் சஞ்சய் தத்தின் பெயரை தனது மோதிர விரலில் டாட்டூஸாக குத்ஹ்டிக் கொண்டுள்ளார் மானயதா தத்.

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் மனைவியான, மானயதா தத் மிகவும் பிசியான பெண்மணி. தனது தயாரிப்பு நிறுவன வேலைகளுக்கு மத்தியிலும் தனது கணவர் சம்பந்தமான பாசப் பணிகளைச் செய்ய தவறுவதில்லை மானயதா.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் சஞ்சய்தத். இதனால், கணவன் -மனைவி இருவரும் தினந்தோரும் கடிதம் வாயிலாகவும், அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

தற்போது, தன் கணவர் சஞ்சய் மீது தான் கொண்ட காதலை காட்டும் விதமாக, தனது மோதிர விரலில் டாட்டூவாக வரைந்துள்ளார் மானயதா தத். தன் அன்பு மனைவியின் செயலைக் கேட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டாராம் சிறையில் இருக்கும் சஞ்சய் தத்.

 

Post a Comment