ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க அசின் மறுப்பு

|

ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க அசின் மறுப்பு

சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க அசின் மறுத்துவிட்டார். அவருக்குப் பதில் வேறு பாலிவுட் நடிகையை ஸ்ரீசாந்த் ஜோடியாக்க முயற்சித்து வருகின்றனர்.

ஊழல் புகாரில் கைதாகி, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இழந்த பாப்புலாரிட்டியை மீண்டும் பெற முயற்சித்து வருகிறார்.

அதில் முதல் முயற்சியாக, கிரிக்கெட்டை விட அதிக பாப்புலாரிட்டியை எளிதில் தரும் சினிமாவில் நடிக்கக் களமிறங்கியுள்ளார்.

பாலச்சந்திர குமார் என்பவர் இயக்கும் பிக் பிக்சர் எனும் மலையாளப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க மலையாளத்திலிருந்து இந்திக்குப் போய்விட்ட அசினைக் கேட்டுள்ளனர்.

ஸ்ரீசாந்த் என்றதுமே அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். சம்பளம் எவ்வளவு கேட்டாலும் தருவதாகக் கூறியும் அசின் நடிக்க ஒப்புக் கொள்ளாததால், அவரை விட பிரபலமாக இருக்கும் பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்கிறோம் எனக் கூறியுள்ளார் இயக்குநர் பாலச்சந்திர குமார்.

இந்தப் படத்தில் ஸ்ரீசாந்துடன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். சுரேஷ் கோபி உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம்.

 

Post a Comment