சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவரும், இப்போது உதயநிதியை வைத்து இது கதிர்வேலன் காதலி படம் இயக்கிக் கொண்டிருப்பவருமான எஸ்ஆர் பிரபாகரனுக்கு நாளை மதுரையில் திருமணம் நடக்கிறது.
மணப் பெண் பெயர் திவ்யா. மதுரையைச் சேர்ந்த இவர் எம்பிஏ படித்துள்ளார்.
மதுரையில் உள்ள ஏ.கிராண்ட் திருமண அரங்கில் காலை 10 மணிக்கு திருமணம் நடக்கிறது.
திருமணத்தில் சசிகுமார், உதயநிதி ஸ்டாலின், அமீர், இயக்குனர் சமுத்திரக்கனி, எஸ்டி சபா, செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் பாலசுப்பரமணியம் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.
Post a Comment