மும்பை: புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ள தன்னை சக நடிகைகள் யாருமே வந்து பார்க்கவில்லை என்று மனீஷா கொய்ராலா தபுவிடம் கண்ணீர்விட்டாராம்.
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். அவர் அண்மையில் தான் மும்பை திரும்பினார்.
அவர் மருத்துவமனையில் இருக்கையில் நடிகை தபு மட்டுமே அவருக்கு அடிக்கடி போன் செய்து ஆறுதல் கூறி வந்தாராம். மனீஷா மும்பை திரும்பிய பிறகு தபு அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தாராம். மேலும் மனீஷாவுடன் சேர்ந்து சிக்கமுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம் தபு.
தன்னை பார்க்க சக நடிகைகள் ஒருவர் கூட வரவில்லையே என்று தபுவிடம் கூறி கண்ணீர் சிந்தினாராம் மனீஷா.
Post a Comment