கார் மோதி சிறுமி மரணம் - காமெடி நடிகர் பாலா கைது

|

கார் மோதி சிறுமி மரணம் - காமெடி நடிகர் பாலா கைது

மதுரை: இளம் நகைச்சுவை நடிகர் பாலாவின் கார் மோதி மதுரை அருகே சிறுமி பலியானார். இந்த வழக்கில் பாலா கைது செய்யப்பட்டார்.

மதுரை அருகே உள்ள பரவையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலா என்ற பாலசரவணன். 'குட்டிப்புலி' படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் இவர். இப்போது 'பண்ணாயாரும் பத்மினியும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை தனது காரில் அழகர்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது செட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற ஏ.வல்லாளபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் உமாமகேஸ்வரி (4) மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து மேலவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Post a Comment