சுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை! - டிவி நடிகர்

|

நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் தங்கை சுனைனாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இருவரும் ரொம்ப நாளா ப்ரண்ட்ஸா இருக்கோம்.. அவ்வளவுதான், என்று டிவி நடிகர் ராஜீவ் பால் விளக்கம் அளித்துள்ளார்.

சுனைனாவும் ராஜீவும் காதலிப்பதாகவும் டேட்டிங் போனதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகரின் தங்கை என்பதால் இது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை! - டிவி நடிகர்

இந்த நிலையில் தனக்கும் சுனைனாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதுதான் எனக்கும் சுனைனாவுக்கும் நட்பு நெருக்கமானது. அதற்கு முன்பும் கூட நாங்கள் நண்பர்கள்தான். நாங்கள் வெளியில் போயிருக்கிறோம். அவர் குடும்பத்தை எனக்கு நன்கு தெரியும்.

இந்த கிசுகிசுக்களைப் படித்துவிட்ட சங்கடப்பட்டோம். பின்னர் வாய்விட்டு சிரித்தோம். அவரும் நானும் நெருக்கமான நண்பர்களாக இருப்பதால், காதலிப்பதாக அர்த்தமில்லை," என்றார்.

ராஜீவ் ஏற்கெனவே நடிகை டெல்நாஸ் இரானியைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரும் முன்னாள் மனைவி இரானியும் ஒரே வீட்டில் தங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment