மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!

|

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!

நடிகை நக்மா மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை அவர் ஏற்கவிருப்பது அம்மா வேடம்.

தொன்னூறுகளில் தமிழ், தெலுங்கில் முதல் நிலை நடிகையாக வலம் வந்தவர் நக்மா.

ரஜினிக்கு நாயகியாக பாட்ஷாவில் நடித்ததின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். சினிமா நடனத்தில் சிறந்த நடிகை எனப் பெயர் பெற்ற நக்மாவுக்கு, சரத்குமார் உருவில் வந்தது சோதனை.

இருவரும் அரவிந்தன், ஜானகிராமன், ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருந்தனர். திடீரென இருவருக்கும் பிரிவு வர, நக்மா சென்னையைக் காலிசெய்து விட்டு மும்பைக்கே போய்விட்டார்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் நடித்த படம் சிட்டிசன். ஆனாலும் தமிழில் தொடரவில்லை. போஜ்புரி படங்களில் பிஸியாக இருந்தார்.

தங்கை ஜோதிகாவுக்கு திருமணமான பிறகு, சினிமாவைவிட்டு ஒதுங்கி அரசியலில் சேர்ந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தர்மா தேஜா இயக்கும் புதிய படத்தில் இளம் அம்மா வேடத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு மிக முக்கிய வேடம். கதையை யோசிக்கும்போதே இந்த வேடத்துக்கு நக்மாதான் என்று முடிவு செய்துவிட்டேன், என்று இயக்குநர் தேஜா கூறினார்.

நக்மா கடைசியாக நடித்த தெலுங்குப் படம் அல்லாரி ராமுடு. 2002-ல் வெளியானது.

 

Post a Comment