விஜய் சினிமாத்தனமில்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர், என்று புகழ்ந்துள்ளார் தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்.
விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.
சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 9-ம் தேதி ‘தலைவா' படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "தலைவா' படம் சிறப்பாக வந்துள்ளது. காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என மெகா பொழுதுபோக்குப் படமாக தலைவா இருக்கும்.
மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன.
விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.
+ comments + 4 comments
vijay is anice gentleman and a minimum guarantee actor. He is aproducer actor and never goes after wasting money. H e has give may hits and 80% of his films are hits leave alone the initial 7 projects.He is rightly described as God of Box office.
Recently starting from Kavalan Vijay gave four hits continuously. Earlier he has given big blockbusters. Only one film now seems to run but singham pandra altop thaanga mudiyalla.VIJAY IS REALLY A GOOD SIMPLE SILENT ACHIEVER UNLESS OTHER COUNTERPARTS.
suriya ni rmba pesura, one film hit kodutha udane ipdi pesakudathu, ithuku munnadi periya director film folp achu, athu napagam iruka.
summa publicity pannatha nanthan next super starnu solli
vijay mathiri silenta iruka paru
Post a Comment