பிரபல சினிமா இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆஸ்கர் மூவீஸ் எம்.பாஸ்கர் (78) சென்னையில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராக திரையுலகில் நுழைந்தார். "பைரவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து "தீர்ப்புகள் திருத்தப்படலாம்', "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்', "பௌர்ணமி அலைகள்', "பன்னீர் நதிகள்', "சட்டத்தின் திறப்பு விழா', "சக்கரவர்த்தி' உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஆஸ்கர் மூவீஸ் என்ற தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் இப்படங்களைத் தயாரித்தார். மேலும், விஜய் நடித்த "விஷ்ணு', "காதல் ரோஜாவே', "தோட்டா' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
மறைந்த பாஸ்கருக்கு மீனா ராணி என்ற மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இன்று காலை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடந்தது.
M Baskar, director and producer of many hit movies was died in Chennai.
Post a Comment