மீண்டும் நடிக்க வருவாரா குல்பி?

|

சென்னை: திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டிலான குல்பி நடிகையை மீண்டும் நடிக்க வருமாறு இயக்குனர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளாராம்.

குல்பி என்று கோலிவுட்டில் அழைக்கப்பட்ட நடிகை ஒருவரின் பெயரைக் கூறினால் அவரது சிரிப்பும், அப்பாவித் தனமாக பேச்சும் தான் நமக்கு ஞாபகம் வரும். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரை தனது படங்களில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவருக்கு பெயரும் வாங்கிக் கொடுத்தவர் பால் இயக்குனர்.

நடிகை உச்சத்தில் இருக்கையிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அந்த பால் இயக்குனர் தான் எடுக்கும் புதிய படம் ஒன்றில் செம வெயிட்டான ரோலில் நடிக்க குல்பியை அழைத்துள்ளாராம். குல்பியோ நான் படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன், நடிப்பில்... என்று இழுத்துள்ளாராம்.

பின்னர் கேட்டது தனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனராச்சே என்று கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்துக் கூறுகிறேன் என்றாராம் நடிகை.

 

Post a Comment