சென்னை: 'யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுக்க முன்வந்தால், சினிமாவை விட்டே விலகிக் கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்துவிடுவேன்!'
-இப்படிச் சொல்லியிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்!
ஏன்... என்னாச்சு?
13 ஆண்டு திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அவரது உடல்நிலையும்தான் இப்படி அவரைச் சொல்ல வைத்திருக்கிறது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு என் அடுத்த படம் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். அடுத்து நான் என் தம்பியுடன் சேர்ந்து படம் பண்ணலாம்... அல்லது ராணாவுடன் இணையலாம்... ரொம்ப நாளாக தாமதமாகிக் கொண்டிருக்கும் என் இந்திப் படத்தைத் தொடங்கலாம்... ஏன், நான் இந்த சினிமாவை விட்டே கூட விலகலாம்!
என் உடல்நிலை சரியில்லை. அதனால்தான் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப மெதுவாகச் செய்கிறேன். குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. என் மகள் என்னை வீட்டைவிட்டு நகரவிடமாட்டேன் என்கிறாள்.
யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுத்துக் கொண்டு, எனது கடன்களை செட்டில் செய்ய ஒப்புக் கொண்டால் நிச்சயம் சினிமாவிலிருந்து விலகி, குடும்பத்தோடு செட்டிலாகி, இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன்!," என்று கூறியுள்ளார்.
+ comments + 1 comments
Seekaram yaaravadhu oru panakararar ivara thathu edungappa..appa daan 13 varusha kodumailendu cinemava ivar kitendun ivar thambi kitendum kaapatha mudiyum..ungaluku punniyama pogum...
Post a Comment