மும்பை: பொதுவாக யாராக இருந்தாலும் தோளோடு தோள் சேர்த்து நட்பாக அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தும் சினேகக் குணம் கொண்டவர் ஷாரூக் கான். அதிலும் பத்திரிக்கையாளர்களைக் கண்டால் அதிக உரிமை எடுத்து பேடும் வழக்கம் உடையவர்.
ஆனால், அவரது 16 வயது மகன் ஆர்யன் அப்படியில்லை. பப்ளிசிட்டி பிடிக்காமல் ஒதுங்கி வாழவே ஆசைப் படுகிறாராம்.
சமீபத்தில் எதேச்சையாக ஆர்யனை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்து விட்டனராம் பத்திரிக்கையாளர்கள். உடனடியாக ஆர்யனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் படமெடுத்துத் தள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.
தன்னால் முடிந்த மட்டும், தன்னை போட்டோ எடுத்து விட முடியாத படி முகத்தை மூடிய படி ஓடி ஒளிந்துள்ளார் ஆர்யன். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிந்ததாம். அதாவது, ஆர்யன் தன் தந்தை ஷாரூக் போல் மீடியா பிரியர் இல்லை என்பது தான் அது.
Post a Comment