சென்னை: சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலி எழுதிய கடைசித் தமிழ் திரைப்படப் பாடல் வசந்த பாலனின் ‘காவியத்தலைவன்'க்குத் தான்.
கிட்டத்தட்ட பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி சென்ற வாரம் காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர், வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்கான பாடல்களை இயற்றும் பணியில் பிசியாக இருந்தார் வாலி.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது கூட, விரைவில் குணமாகி காவியத்தலைவன் படப்பாடல்களை விரைவில் முடித்துத் தருகிறேன் என உறுதி அளித்தாராம் வாலி.
ஆனால், காலம் அவரை அதற்குள் அழைத்துக் கொண்டான். ஆனால், உடல் நலம் குன்றுவதற்கு முன்னரே, காவியத்தலைவனுக்காக ‘கோடாலி முடிச்சு போட்டு...' என ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார் வாலி. இது ஒரு காதல் பாடலாம்.
இதன் மூலம், காவியத்தலைவன் படம் திரைக்கு வந்து வெற்றி பெறுகிறதோ இல்லையோ, வாலி கடைசியாக பாடல் எழுதிய படம் என்ற சிறப்பை இப்போதே பெற்றுவிட்டது காவியத்தலைவன்.
மேலும், ஒரு வந்தனப் பாடலையும் காவியத்தலைவனுக்காக வாலி எழுதிக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.
Post a Comment